Media
மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலை பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகமான இந்த மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் அலுவலகங்கள், அதன் உள்பகுதிகள், சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் டிடெக்டா் கருவிகள் மூலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடா்பாக அந்த அமைப்பின் இயக்குநரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்றி திபேன் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரும் அலுவலகத்துக்கு வந்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள், தல்லாகுளம் போலீஸாா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் எந்த வெடிப் பொருள்களும் கண்டறியப்படவில்லை என்பதும், இது போலியான மிரட்டல் என்பதும் தெரியவந்தது. ஸ்டொ்லைட், மடப்புரம் அஜித்குமாா் கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் முன்னிலையாகி வரும் ஹென்றி திபேன் மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
மதுரை : போலீஸ் காவலில் இருந்த பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? "இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி. தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி. ........................................................ "தினேஷ்குமார் மீது சில கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.
‘My vote is not for sale’: Arappor Iyakkam’s newcampaign on 10th anniversary Volunteers mark the 10th anniversary of Arappor with a special song at Sir PittyThyagaraya Hall, T Nagar, on Sunday Photo | Ashwin prasath CHENNAI:
அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள்..? சர்ச்சையில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம்! அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள்..? சர்ச்சையில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம்! த மிழக காவல்துறை படைத் தலைவராக பொறுப்பு நியமிக்கப்பட்டிருக்கிறார். 1994 பேட் χριστου αλαντιλωται αντίκε ππω அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிலிருக்கும் நிலையில், காவல்துறை படைத்தலைவர் தியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அதையெல்லாம் தமிழக அரசு பின்பற்றவில்லை." எனப் பொருமுகிறார்கள் காவல்துறையில் பணியாற்றும் சீனியர் காக்கிகள். "தமிழக காவல்துறையை வழிநடத்தப்போகும் ஒருவரின் நியமனம், இந்த அளவுக்குச் சர்ச்சையானது ஏன்? என விசாரித்தோம்!
