Media
சென்னையில் வரும் 10ம் தேதி மனிதநேய விருது வழங்கும் விழா: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு சென்னை: சென்னையில் வரும் 10ம் தேதி மனிதநேய விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 31ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மனிதநேய விருது வழங்கும் விழா வரும் 10ம் தேதி(புதன்கிழமை) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. விழாவிற்கு தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகிக்கிறார். விழாவில் சமூக நல்லிணக்கத்திற்கான மனிதநேய விருது- பாலபிரஜாபதி அடிகளாருக்கு வழங்கப்படுகிறது. மனித உரிமை காப்பாளருக்கான மனிதநேய விருது- வழக்கறிஞர் ஹென்றி திபேன், கல்வி பணிக்கான மனிதநேய விருது- பேர்ணாம்பேட்டை பொறியாளர் பி.கே.சபீர் அகமது, ஊடக பணிக்கான மனிதநேய விருது- ஊடகவியலாளர் வீரபாண்டியன், சுற்றுச்சூழல் காப்பாளருக்கான மனிதநேய விருது- பேராசிரியர் ஜெயராமனுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu: Most victims were poor and marginalised Tamil Nadu: Most victims were poor and marginalised An analysis of custodial deaths in Tamil Nadu in the past four years show the majority of victims belong to Scheduled...
பொறுப்புடிஜிபிநியமனம்... குவியும் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் முறையீடு! தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப்டம்பர்2) முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுத்தாக்கல்செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசுஉத்தரவிட்டது. இது பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. .................................................................................................... முன்னதாக, “டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழக அரசுமீறி உள்ளதாகவும், டிஜிபி நியமன பெயர்பட்டியலைகுறிப்பிட்ட காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவில்லை. இது நீதிமன்றஅவமதிப்பாக கருத வேண்டும்” என பொறுப்புடிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசுக்குஎதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு டிஜிபி நியமனம்.. தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல்செய்துள்ளார். தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றார். சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில்புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்அவமதிப்புவழக்குதொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்
தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் –உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்! தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான ஹென்ரி திபேன் என்பவர், ஜி. வெங்கட்ராமனை பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ........................................................................
''தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்'' - உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் வழக்கு! - TAMIL NADU DGP டிஜிபி சங்கர் ஜிவால் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் வெங்கட்ராமன் என்ற நபரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சமூக நீதி அரசு 'பொறுப்பு' என்ற புதிய சொல்லை கண்டுபிடித்து இருக்கிறது....
Stubborn for a cause: How a Dalit mother is waging a war to let her son rest in peace Despite the arrest of six persons, a woman in Tamil Nadu relentlessly fights to bring the authorities...
