for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

2 Sep 2025 பொறுப்புடிஜிபிநியமனம்... குவியும் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் முறையீடு! People's Watch in Media Madurai

பொறுப்புடிஜிபிநியமனம்... குவியும் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் முறையீடு! தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப்டம்பர்2) முறையீடு செய்யப்பட்ட  நிலையில், மனுத்தாக்கல்செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசுஉத்தரவிட்டது. இது பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. .................................................................................................... முன்னதாக, “டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழக அரசுமீறி உள்ளதாகவும், டிஜிபி நியமன பெயர்பட்டியலைகுறிப்பிட்ட காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவில்லை. இது நீதிமன்றஅவமதிப்பாக கருத வேண்டும்” என பொறுப்புடிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசுக்குஎதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

##Minnambalam, ##dgp, ##venkatraman, ##MKStalin, ##HC, ##HighCourt, ##MaduraiBench, ##TNPolice, ##HenriTiphagne
2 Sep 2025 பொறுப்பு டிஜிபி நியமனம்.. தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு People's Watch in Media Madurai

பொறுப்பு டிஜிபி நியமனம்.. தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு   டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல்செய்துள்ளார். தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றார். சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில்புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்அவமதிப்புவழக்குதொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்

##OneIndia, ##dgp, ##venkatraman, ##TNPolice, ##TNCM, ##MKStalin, ##dmk, ##HenriTiphagne


Join us for our cause