Media
மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்? "மலையில் சாதி, மதம் பார்க்காமல் வாழ்ந்த எங்களுக்கு சமத்துவபுரம்போல் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், மலையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக் கூடாது" என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்". மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஹென்றி திபேன், ராபர்ட் சந்திரகுமார் பேசும்போது, "மாஞ்சோலையில் இன்னும் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இன்றளவும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மற்றவர்கள் கீழே உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க மாஞ்சோலைக்கு சென்று வருகிறார்கள். மறுவாழ்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இதைக் கடந்து புலிகள் காப்பக பகுதியில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
Manjolai workers appeal to TN government against forceful eviction; seek time till disposal of SLP The workers said they are ready to obey the High Court's order and have no intention to remain at the estate. But the...
Manjolai families seek samthuvapuram, nothousing complex Madurai: Families in Manjolai are ready to relocate but have urgedthe state govt to consider establishing a samathuvapuram(Periyar memorial equality village) instead of moving them to amulti-storeyed housing complex in Reddiarpatti, Tirunelveli....
Failed by the Judiciary Tamil Nadu’s courts keep issuing orders against illegal mining. The quarries stay open. The activists get killed. And justice? Mostly adjourned. EDGAR KAISER, HENRI TIPHAGNE The killing of Jagabar Ali...
Tamil Nadu: JAACT seeks special Act against police excesses Chief Minister MK Stalin, who praised the film Jai Bhim (which talks about the gruesome truth of custodial torture), should take responsibility for the custodial deaths taking place under...
திமுக ஆட்சியில் என்கவுண்டர், மனித உரிமை மீறல்.. தமிழகம் முதலிடம்'' - 75 இயக்கங்கள் கண்டன அறிக்கை! -மனித உரிமை மீறலில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்வதாக குற்றச்சாட்டு "திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்" பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ............................................ `அதிகாரத் திமிருடன் மனித உரிமை மீறல்..' இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காக்கிறது. தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இதுபோன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும். சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அறிக்கை சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே சளைக்காமல் திமுக ஆட்சியில் போலீஸ் செய்த 16ஆவது என்கவுண்டர் அதிகரிக்கும் காவல் வன்முறைக்கு காரணமான போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் குற்றத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை உடைப்பதும், கைது செய்யப்பட்டவரை மீண்டும் சுட்டுப் பிடிப்பதும், தமிழ்நாட்டின் காவல்துறையின் வன்முறை என்பது அன்றாட பணியாக மாறிவிட்டது. தற்போது சட்டமன்றத் தொடர் நடக்கும் போதே திமுக ஆட்சியில் 16ஆவது என்கவுண்டர் நடத்தி, இதுவரை 19 நபர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகரக் காவல் ஆணையராசு அருண் பொறுப்பேற்ற பின்பு, சென்னை மாநகரக் காவல்துறையினர், 4 நபர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதுபோன்று தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் போலீசாரை மக்கள் கண்காணிப்பகம் கண்டிக்கிறது. ....................................
