People's Watch in Media

சைலேந்திரபாபுவுக்கு தெரியாமல் நடந்ததா?முதுகுளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேரலை யூடியூப் சேனலுக்கு பேட்டி பேரலை யூடியூப் சேனல் To Watch Video: https://youtu.be/bUS7tQbeagc

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் விவகாரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் Red Pix சேனலுக்கு அளித்த பேட்டி To Watch full video: https://youtu.be/8N4DcBFna78

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கியூ பிரிவு போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார் தலைமைக் குழு உறுப்பினர் மு.தமிழ்ப்பித்தன், மாவட்ட தலைவர் மா.மாயாண்டி, மாவட்ட செயலாளர் பி.விடுதலை சேகர், மாவட்ட அமைப்பாளர் ச.கிட்டு ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வாஞ்சிநாதன் உட்பட்ட பல்வேறு அமைப்பினர் பேசினர்.


தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 25.11 அன்று தோழர் தமிழ்பித்தன் வீட்டில் கியூ பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் தமிழ்பித்தன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடைபெற்றதாகவும், மேலும் புத்தகங்கள் இதழ்கள் துண்டறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஜனநாயக விரோதமாக எடுத்து சென்றுள்ளனர். என்றும், மேலும் தமிழ்பித்தன் மகள் அகராதி வீட்டிலும் கியூ பிரிவு போலீசார் சோதனை என்ற பெயரில் சட்டவிரோதமாகவும் அத்துமீறி நடந்துகொண்ட முறை கண்டித்தும், தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்றும் அத்துமீறி நடந்துகொண்ட க்யூ பிரிவு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. கியூ பிரிவு போலீஸார் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா (UAPA) சட்டத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன், மீ. தா. பாண்டியன், கனியமுதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ. ஞானவேல் அவர்கள், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார். இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள். ................................................................. .................................................................

சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா அவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் அவர்கள் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம். சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும், ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள். ..................................................

ஜெய்பீம் படத்தை ஜாதிய ரீதியாக எதிர்ப்பதா? 100க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் சென்னை; நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை ஜாதிய ரீதியாக எதிர்த்து மிரட்டல் விடுக்கும் போக்குக்கு 100-க்கும் மேற்பட்ட சமூக செயற்பட்டாளர்கள் கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்உரிமைப் பேரவையின் கண....

போதைப் பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது என சட்ட, ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், காவல் நிலையங்களில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ................................... மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் பேசுகையில், `சிறுவர்கள் சினிமாவில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து தடம்மாறுகிறார்கள். என்னிடம் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள். பட்டாக்கத்தி ஒன்றை அவன் வைத்திருந்தானாம். போதைக்கு அடிமையானவன். நான் அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசினேன். பள்ளி ஆசிரியர்களிடமும் பேசினேன். பிறகு, அந்த மாணவனிடம் பேசியபோது, `தவறான சகவாசத்தால் இப்படி ஆகிவிட்டேன். திருந்திவிடுகிறேன்’ என்று அழுதான். அவனைச் சட்டப்படி பார்த்தால், போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவன் பயங்கர கிரிமினலாக மாறிவிட வாய்ப்பு உண்டு. அதை யோசித்த நான் கவுன்சலிங் செய்து அனுப்பினேன். பள்ளித் தரப்பில் ஒரு வாரம் சஸ்பெண்ட் மட்டும் செய்தார்கள். வீட்டில் நல்ல அரவணைப்பையும் கண்காணிப்பையும் தரச் சொன்னேன். இப்போது அவன் மனம் திருந்தி நல்லபடியாக நடந்துவருகிறான். குற்றச் சம்பவங்களில் தெரியாமல் நுழையும் மாணவர்கள், இளைஞர்களைச் சட்டப்படி தண்டிக்காமல் கவுன்சலிங் செய்தால் நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். இந்த மாதிரிச் சிறுவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கும் ரௌடி கும்பல் வெளியே நடமாடுகிறது. அவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கிறது. அந்த மாதிரி ஆட்களை எந்த அரசியல் கட்சியும் வளர்த்துவிடக் கூடாது. நமது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும்'' என்றார். ................................................................................