for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

27 May 2022 Spectre of brutality: Custodial death in Chennai shocks Tamil Nadu People's Watch in Media Chennai

The custodial death of a Dalit youth in Chennai again sparks outrage and highlights the urgent need to humanise the police force. On the night of April 18, a team of Chennai policemen, carrying out a routine vehicle...

#TheHindu, #Frontline, ##Vignesh, ##VigneshCustodialDeath, ##VigneshDeath, ##ChennaiLockupDeath, ##CustodialTorture, ##CustodialDeath, ##PoliceTorture, ##EJK, ##ExtraJudicialKilling, ##HenriTiphagne, ##JAACT
17 May 2022 "ஒரு வருடத்தில் லாக்அப் டெத் 10; 24 வருடத்தில் என்கவுண்டர் டெத் 114!" - மதுரை மக்கள் கண்காணிப்பகம் People's Watch in Media Chennai

ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 07-01-2021-ல் சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் சூர்யா, 03-4-21-ல் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் ராஜாமணி, 07-07-21 கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்திர பிரசாத், 24-08-21-ல் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவாணன், 04-09-21-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன், 12-12-21-ல் இராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் மணிகண்டன், 13-01-22 நாமக்கல் கிளைச்சிறையில் பிரபாகரன், 05-02-22 திருநெல்வேலி ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சுலைமான், 14-02-22 திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் தடிவீரன், 18-04-22 சென்னை தலைமைச்செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் என 10 காவல் நிலைய மரணங்களைத் தெரிவித்துள்ளனர். `ஜெய் பீம்' படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு மிசா காலத்தில் தான் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பதிவு செய்த முதலமைச்சர், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவிகள் காவல்துறையினரால் பாதிக்கப்படாத வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவும் வேண்டும் என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

#HenriTiphagne, #ஹென்றிதிபேன், #மக்கள்கண்காணிப்பகம், #காவல்மரணங்கள், #மதுரைமக்கள்கண்காணிப்பகம்
13 May 2022 தமிழக காவல்நிலையங்களில் அதிகரிக்கும் மரணங்கள் - மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும் People's Watch in Media Chennai

தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். 'புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ................................................................................................................................................................................................................................................................... இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தாலும், காவல்நிலைய மரணங்களின் மீது அரசு அலட்சியம் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ''விக்னேஷ் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை கடுமையாகப் போராடித்தான் பெற்றோம்'' என்கிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹென்றி திபேன். '' விக்னேஷ் வழக்கில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. கடந்த மே 3 ஆம் தேதிதான் அதன் அறிக்கை கிடைத்தது. அத்தனை நாள்கள் வரையில் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் காட்டாமலேயே வைத்திருந்தது. மேலும், 'சட்டபூர்வ உரிமை உள்ளவர்களிடம்தான் கொடுக்க முடியும்' என்றனர். நாங்களும் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒருவரைக் கூட்டிச் சென்றோம். அதன்பிறகு அதற்கான சான்று வாங்கி வரச் சொன்னார்கள். அவர்களிடம் ஆதார், பான் கார்டு, ரேசன் அட்டை என எதுவுமே இல்லை. இதன்பிறகு கடும் போராட்டத்துக்குப் பிறகு மே 3 ஆம் தேதி பிரேதப் பரிசோதனை அறிக்கையை கொடுத்தனர். முன்னரே அது வெளிவந்திருந்தால் 26 ஆம் தேதி சட்டசபையில் முதல்வர் உண்மையைப் பேசியிருப்பார். இதற்கிடையில் விக்னேஷ் மரணத்துக்கு வலிப்பு நோய் காரணம் என அவருக்கு யார் அறிக்கை கொடுத்தது?'' என கேள்வி எழுப்புகிறார், ஹென்றி திபேன். .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

##BBCTamil, #காவல் நிலைய மரணங்கள், #விக்னேஷ் மரணம், #HenriTiphagne, #ஹென்றிதிபேன், #மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
11 May 2022 திமுக அரசு @ 1 ஆண்டு | சட்டம் - ஒழுங்கு: லாக்கப் மரணங்களும், காவல் நிலைய சிசிடிவி கேமராக்களும் - சில சந்தேகங்கள் People's Watch in Media Chennai

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன். " 'ஜெய்பீம்' திரைப்படம் பார்த்துவிட்டு, கண்ணீர் வடித்ததாக கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த சமூகத்தில் தொடர்ந்து காவல்துறையினரின் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் குறவர், இருளர் சமூகங்களுக்கு எதிரான அநீதிகளின்போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாட்களிலிருந்து கல்வித் துறை, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், விவசாயம், நீர்வளத்துறை, சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டார். அதேவேளையில், முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் அதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வராதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காவல்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் கூட, ஏற்கெனவே காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மிகச் சரியாக பின்பற்றவாவது உத்தரவிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.  

#TheHinduTamil, #HenriTiphagne, #JAACT, #ஹென்றிதிபேன், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம், #ஹென்றிடிபேன்
11 May 2022 TN: ‘Poor Police Accountability Leads to Human Rights Violation’ People's Watch in Media Madurai

‘A rank of police always get away with impunity, thereby they continue using force. They should be made accountable for custodial torture,’ say human rights activist Henry Tiphagne. Which government handled custodial deaths in a proper manner? DMK...

#NewsClick.in, #NewsClick, #HenriTiphagne, #Interview, #CustodialDeath, #Torture, #Police, #PoliceTorture, #PoliceViolence, ##ExtraJudicialKilling
7 May 2022 Cops Face Arrest For Murder In Chennai Custodial Death Case People's Watch in Media Chennai

The case, earlier registered under sections of suspicious death, was modified to a murder case after the post-mortem found 13 injuries on the body All India Written by J Sam Daniel StalinUpdated: May 07, 2022 8:51 am IST...

##HenriTiphagne, ##PeoplesWatch, #VigneshCustodialDeath, #CustodialDeath, #PoliceTorture, #LockUpDeath, #ChennaiPolice


Join us for our cause