for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

2 Jul 2025 "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை People's Watch in Media Madurai

"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு. .................................................. நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ................................ முன்னதாக அஜித்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது. .........................

##BBC, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!! People's Watch in Media Madurai

அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை... பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி... காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்... திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் சிறப்பு வனத்தில் பணி செய்கின்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம் தற்போது நான் அனைவரின் சார்பாக பேசுகின்றேன் அனைத்து வாதாடிய வழக்கறினார்கள் சார்பில் நான் பேசுகின்றேன். .....................................................

##angusam, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன? People's Watch in Media Madurai

அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன? மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர். ....................................................... மனுதாரர் வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மாரீஸ்குமார் வாதிடும்போது, "சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததும் விதிமீறல்தான். அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலாளர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் ஒரு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுப்பதாகவும், சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றனர். .....................................................................

##ajithcase, ##HinduTamil, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, #v, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
2 Jul 2025 அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி! People's Watch in Media Madurai

அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி! Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. ............................................. மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பொதுந வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பு அஜித்குமாரின் உடலை முழுமையாக பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்தார். நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா என்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் ஹென்றி திபேன் வாதிட்டார்.  ...........................................................  

##ZeeNews, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
1 Jul 2025 அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை People's Watch in Media Madurai

அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் இளைஞர் அஜித்குமார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். மேலும், காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைப் இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். ....................................................

##NewsTamil, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan


Join us for our cause