Media
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை... பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி... காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்... திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் சிறப்பு வனத்தில் பணி செய்கின்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம் தற்போது நான் அனைவரின் சார்பாக பேசுகின்றேன் அனைத்து வாதாடிய வழக்கறினார்கள் சார்பில் நான் பேசுகின்றேன். .....................................................
அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி! Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. ............................................. மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பொதுந வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பு அஜித்குமாரின் உடலை முழுமையாக பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்தார். நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா என்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் ஹென்றி திபேன் வாதிட்டார். ...........................................................
அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் இளைஞர் அஜித்குமார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். மேலும், காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைப் இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். ....................................................
