for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

6 May 2023 இந்திய காவல் பணி அதிகாாிகள் சங்கத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் திறந்த மடல் Press Releases

தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "திரு.பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக திரு. பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் திரு.பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக, அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.

#media
6 May 2023 ஏஎஸ்பி, போலீசார் மீது 3வது வழக்கு பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐஜி தலைமையில் விசாரணை: பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிபிசிஐடியிடம் மனு People's Watch in Media Tirunelveli

அருண்குமாரின் சகோதரர், 17 வயது சிறுவன், அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், மாடசாமியுடன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்கள் ஏடிஎஸ்பி சங்கரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘ஐஜி தலைமையிலான அதிகாரியின் மேற்பார்வையில் விசரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணைக்கு சாட்சிகள் ஒத்துழைப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் விசாரணை நேற்று நடைபெறவில்லை.

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
5 May 2023 கைதிகள் பற்களைப் பிடுங்கிய பல்வீர்சிங்கை கைது செய்ய வேண்டும்: பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு People's Watch in Media Tirunelveli

அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “பல்வீர்சிங் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. குற்றம் சாட்டியவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதிக்கப்பட்டவர் இப்போது பெங்களூரில் இருக்கிறார். அவர் 5-ம் தேதி ஆஜராக 3-ம் தேதி சம்மன் அனுப்புகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி மேல் நடக்கும் குற்றச்சாட்டு குறித்து ஐ.ஜி, அல்லது டிஐஜி நிலை அதிகாரியே விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் கைது செய்யப்பட்ட பின்பே உண்மைநிலை வெளிவந்தது. அதேபோலத்தான் இதிலும் பல்வீர் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் ”என்றார்.

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
5 May 2023 ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தல் People's Watch in Media Tirunelveli

அருண்குமார் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குற்றம்சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார். பாதிக்கப் பட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலோடு இருந்து வருகிறார்கள். பெங்களூரில் வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5- ஆம் தேதி ஆஜராக 3-ந்தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் நிலையில் அவருடைய நிலையிலிருந்து மேல் அதிகாரியாக இருக்கும் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். டி.எஸ்.பி தலைமையில் விசாரணை என்பது சரியானதாக இருக்காது,குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உண்மை நிலை வெளிவரும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் தான் உண்மை சம்பவங்கள் வெளியே வந்தன. கைது நடவடிக்கை இருந்தால் தான் துணிச்சலுடன்  தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சாட்சியம் அளிப்பார்கள். இந்த விசா ரணையை மேற்பார்வை செய்ய உயர் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். நீதித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு இந்த வழக்கில் ஆதரவாகச் செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.  

##மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன் #ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##CBCIDTamilNadu, ##CBCIDTN, ##CBCIDTirunelveli, ##CBCIDNellai, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்

Join us for our cause