for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

21 Jun 2022 41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கை - தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின்  பாராட்டுக் கடிதம் Press Releases Madurai

41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின்  பாராட்டுக் கடிதம் மரணத்தை விளைவிக்கும் காவல் சித்திரவதை, காவல்  வன்முறை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழும் போதெல்லாம்  மக்கள் கண்காணிப்பகம்  பெரிதும் கவலை கொண்டது. இந்நிகழ்வுகள் மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்களின் மனசாட்சியை வெகுவாக உலுக்கியது. இத்தகைய இடர்மிகு நேரத்தில் தாங்கள் சரியான முடிவெடுத்து “41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” சுற்றறிக்கை மூலம் வெளிப்படையாக அறிவித்தது போற்றுதலுக்குரிய செயலாகும். இந்த சுற்றறிக்கையை மிகவும் உன்னிப்பாகப் படித்த போது தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த காவல் மரணங்களே இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.  

#HenriTiphagne, #TNPolice, ##TNDGP, #SylendrababuIPS
13 Jun 2022 பத்திரிகை செய்தி: தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன்வந்து (suo moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும். Press Releases Madurai

தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.   சென்னை உயர்நீதிமன்றம் அப்பு (எ) ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன் வந்து (Suo-Moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும். சம்பவ நாளன்றே தொடர்புடைய காவலர்களை பணியிடை...

##CustodialDeath, ##PoliceTorture, ##PressRelease, ##ExtraJudicialKilling, ##EJK, ##PoliceViolence, ##Rajasekar@Appu
4 Jan 2022 பத்திரிகை செய்தி - தமிழ் நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் உண்மையெனில் பிரதமர், தமிழ் நாடு முதல்வர், அதிகாரிகள், காவல்துறையினர், குடிமை சமூகம், வியாபாரிகள் சங்கம் ஒன்றாக இணைந்து கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டிய அவசியத்தை மக்கள் கண்காணிப்பகம் வலியுருத்துகிறது Press Releases Madurai

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இதன் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை விரைந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிகள்,  நீதிமன்றங்கள் மூடப்பட்டு இணையவழியில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  போராட்டங்கள், பொது கூட்டங்கள்   நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முன்னெச்சரிக்கைச்  செயற்பாடுகளை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்நெறிமுறைகளை மீறும் சிலவற்றையும் சமூக அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. பள்ளிகள் மூடப்படும் நேரத்தில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏன் நடத்தப்படுகின்றன? ஒருபக்கம் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு எல்லாவற்றையும் மூடுங்கள் என்று உத்தரவிடும் அரசு மறுபக்கம்  மதுரைக்கும், தென் மாவட்டங்களுக்கும்  பிரதமர் வருகை, முதல்வர் வருகை என மக்கள் கூட்டத்தைக் கூட்ட முயற்சிப்பது முரண்பாடாக உள்ளது. ஒமைக்ரான்  தொற்று வேகமாகப் பரவுகிறது என்பது உண்மை என்றால் பெருந் திரளாய் மக்களைக் கூட்டும் அரசியல் நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக   தேவையற்ற  ஒன்றாகும். எனவே  மக்கள் கூடும் பொது நிகழ்வுகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும்  தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள்  என்று அரசு வெளிப்படையாக  அறிவிக்க வேண்டும். இதே போன்று மக்களை நேரிடையாகச் சந்தித்து வாக்கு சேகரிக்கும்  நகராட்சி, மாநகராட்சி தேர்தல் பணிகளையும், இதே காரணத்திற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கை திரும்பும்  வரைத் தள்ளிப்போடுவதில் எந்த அச்சமும், ஆளுங் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருக்கக் கூடாது. மக்களின் உடல் நலனே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க  வேண்டும். ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் பாரதிய சனதா கட்சி சார்பில் மதுரையில்  பொங்கல் விழா கொண்டாடப்படும், அதில் பாரத பிரதமர் கலந்து கொள்வார் என்று கூறும் அதே நேரத்தில், இத்தகைய நிகழ்வு  ஒமைக்ரான் பரவலை அதிகப்படுத்தும் என்பதில் அக்கட்சியினர்க்கே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே தயை கூர்ந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வைத் தடுத்து, ஒமைக்ரான் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.     பொங்கல் விழாவின் போது பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு பிடிப்பவர்கள், மாடு விடுபவர்கள், உள்ளூர் மக்கள், பல்துறை அதிகாரிகள் போன்றோர்க்கு மட்டும் சிறப்பு அடையாள அட்டையுடன், தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும்.  மற்றவர்கள் நிகழ்ச்சியைக் காண தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதே போன்று கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அதன் நிர்வாகிகள் தாமாக முன்வந்து கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நடைமுறைகளைக்  கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போல் வெளிமாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முறையான தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும்  பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதி செய்ய அனைத்து மாநில எல்லைகளிலும் அதிகாரிகளையும், மருத்துவர்களையும் நியமனம் செய்து தமிழ் நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம். இதே போன்று எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் மத நிகழ்வுகளை நடத்தும்போது கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் நடைமுறையை ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை தாமாகவே முன் வந்து கடைப்பிடிக்க வேண்டும்.   ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றிருக்கும் மருத்துவ கல்லூரிகளை முறையாகத் திறந்து வைக்க  வருகிற  12.1.2022 அன்று  பாரதப் பிரதமர் விருதுநகர் வருகிறார் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.  இதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கான இடத்தைத்  தெரிவு செய்யும் பணியில் தமிழக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத பிரதமரும், தமிழ் நாடு முதல்வரும்  மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை இந்நிகழ்வுகளை ஒத்தி வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் இந்நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாதரணமாக மக்கள் அதிக அளவில் கூடுகின்ற பகுதிகளில் அரசதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் குடிமைச் சமூக அமைப்புகள், வியாபாரிகள்  (காய்கறி, பூ, ஜவுளி,மீன்) சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் போன்றவை தாமாக முன்வந்து மக்கள் அதிக அளவில் மக்கள் கூடுவதைக் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கிருமினாசினியால் கைகளைச் சுத்தப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தும் தமிழகமாக, அரசிற்கும், காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக  அனைவரும், அனைத்துக் கட்சிகளும், குடிமை சமூகங்களும், இயக்கங்களும் இணைந்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது.  இப்படிக்கு, ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர் மக்கள் கண்காணிப்பகம்  

#PressRelease
22 Dec 2021 Press Release - People's Watch welcomes the order of the SHRC and appeals for zero tolerance to violence by uniformed services Press Releases Madurai

22.12.2021 PRESS RELEASE People’s Watch welcomes the order of the SHRC and appeals for zero tolerance to violence by uniformed services People’s Watch has the greatest pleasure to welcome and acknowledge the Tamil...

#PressRelease, #PWPressRelease, #SHRC, #SHRCOrder, #Tribal, #Irular, #Compensation, #LegalProceedings
25 Nov 2021 திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது! Press Releases Madurai

திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது! கடந்த 21.11.2021 அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு  களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம்.  இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள்.     இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்  கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

#SSIBoominathan, #PressRelease, #Condemns, #TrichySSI
16 Oct 2021 ஸ்ரீபெரும்புதூரில் முதல் காவல் கொலை! தூத்துக்குடியில் இரண்டாவது காவல் கொலை! Press Releases Madurai

பத்திரிக்கைச் செய்தி   ஸ்ரீபெரும்புதூரில் முதல் காவல் கொலை! தூத்துக்குடியில் இரண்டாவது காவல் கொலை!   தமிழக காவல்துறைக்கு சுடுவதற்கு கற்றுக் கொடுக்கவேண்டுமா? தூத்துக்குடியில் சரியாக மக்களை சுட்டவர்களுக்கு, காவல்துறை எப்படி சுடவேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டுமா? இடுப்பிற்குக்...

#EncounterKilling, #PoliceAtrocities, ##PoliceTorture
13 Oct 2021 பத்திரிக்கைச் செய்தி - ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை: திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு - மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது Press Releases Madurai

பத்திரிக்கைச் செய்தி ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை: திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது

#EncounterDeath, #PoliceFiring, #PoliceAtrocities
5 Jun 2021 An open letter to the new government in Tamil Nadu even as it completes 30 days of its newly-won tenure and appeal to the impatient Opposition AIADMK and BJP. Press Releases Madurai

An open letter to the new government in Tamil Nadu even as it completes 30 days of its newly-won tenure and appeal to the impatient Opposition AIADMK and BJP.   Democratic tradition and norms demand that...

#DMK, #Appeal, #TNGovt
5 Jun 2021 திமுக புதிய ஆட்சி பொறுப்பேற்று முப்பது நாட்கள் (மே 7 முதல் ஜூன் 7 வரை) முடியுந் தறுவாயில் மக்கள் கண்காணிப்பகம் விடுகின்ற திறந்த மடல் Press Releases Madurai

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு நூறு நாட்களைக் கடந்த பின்னரே அதன் செயற்பாடுகள் குறித்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட  வேண்டும். இது தான் சனநாயக மரபின்  நடைமுறையில் இருக்கும் அரசியல் ஒழுக்க முறைமை, நியதி ஆகும். ஆனால் தமிழகத்தில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் இந்த அரசைப் பற்றி எதிர்க்கட்சியும், பாரதிய சனதாவும் தொலைக்காட்சிகளில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைப்பது, அநாகரிகமாகப் பேசுவது அரசியல் அறமற்ற செயலாகும்.    புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் நூறு நாட்கள், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறவேண்டிய நேரம்.  சனநாயக நெறிமுறைப்படி புதிய அரசு  அமைத்துள்ள “அனைத்துக்கட்சிக் குழுவில்” ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக், கருத்துகளை   எடுத்துரைப்பது தான் அராசியல் நாகரிகம் ஆகும். இதைவிடுத்து பொதுவெளியில் குற்றம் சாட்டுவது வெறுப்பரசியலாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகிறது.       குடிமைச்சமூகத்தின் நேர்கொண்ட பார்வை: ஓர் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, நேர்மையான செயற்பாடுகளைப்  பாராட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும், தார்மீக உரிமையும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு உள்ளது.  குடிமைச்சமூக அமைப்பு என்பதை அரசு சாரா அமைப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம். அவர்கள் மனித  உரிமைகளுக்காக, மீறல்களுக்கெதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள், குறிப்பாக அரசியல் கட்சிகளைச்  சாராதோர் ஆவர். திமுகவின் வெற்றிக்கு அதன் கட்சியினர் மட்டும் காரணமல்ல. குடிமைச்சமூகத்தினர், எட்டுவழிசசாலை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், குடியுரிமைத் திருத்தச்சட்டம்  போன்றவற்றிற்கு எதிராகப் போராடியோர், தொழிற்சங்கத்தினர், பெண்ணுரிமை அமைப்பினர் மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவோர், மனித உரிமைகள் தளத்தில் பணியாற்றுவோர், தமிழ்த் தேசிய கருத்துகளை முன் வைத்து பணியாற்றுவோர்,  ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்தோர் இவர்கள் அனைவரும்  மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். இவர்கள்  அளித்த வாக்குகளும் சேர்ந்து வெற்றிக்கு வித்திட்டு புதிய அரசைப் பொறுப்பேற்க வைத்துள்ளது என்பதை இங்கே நினைகூர விரும்புகிறோம்.

#DMK, #TNGovt, #PeoplesWatch, #Appeal
3 Jun 2021 ஏழு தமிழர்கள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் விடுதலைக்கான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டளர்களின் கூட்டறிக்கை Press Releases Madurai

முன்னாள் முதலவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழு தமிழர்கள், அனைத்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி NCHRO சார்பாக அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள்,திரைப்பட இயக்குனர்கள் ,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் வெளியிடப்படும் கூட்டறிக்கை கோரிக்கை மனு: People's Watch also Endorsed

#PressRelease, #NCHRO, #Prisoner, #Prisonersrelease


Join us for our cause