People's Watch in Media
Human rights activist Henri Tiphagne filed a petition in the Madras High Court to re-investigate the Thoothukudi firing incident in which 13 anti-Sterlite protesters were shot and killed by the police. The case was listed before a division comprising...
"மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார் ஹென்றி திபேன்.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மணித உரிமை ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்திருந்த அறிக்கை, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, என் மான அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, இழப்பீடு வழங்கியது என, தமிழக அரசின் அறிக்கை அடிப்படையில், வழக்கை முடித்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, சீலிடப்பட்ட உறையில் இருந்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலனாய்வு பிரிவின் அறிக்கை, அரசுக்கு கிடைத்ததா என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை நகல் அரசுக்கு வரவில்லை." என்றார். புகார் அளித்த தனக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புகார் அளித்தவரின் தரப்பை கேட்காமல், தேசிய மனித உரிமை ஆனையம், வழக்கை முடித்து வைத்தது எப்படி என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை தள்ளி வைத்தனர்
