for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

17 Oct 2021 Encounter: Search on for two aides of history-sheeter People's Watch in Media Madurai

Encounter: Search on for two aides of history-sheeter Oct 17, 2021, 04.40 AM IST Tuticorin: More than 30 hours after the killing of history sheeter S Duraimurugan near Muthaiahpuram in rural Tuticorin on Friday, the police were...

#TimesofIndia, #TOI, #Encounter, #EncounterKilling, #EncounterDeath, #FakeEncounter, #HenriTiphagne, #Sriperumputhur, #Thoothukudi
17 Oct 2021 8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன? People's Watch in Media Madurai

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் படிப்படியாக வளர்ந்து ரவுடியாக மாறியிருக்கிறார். இவருக்கென தனியாக கேங்க் எதுவும் கிடையாது. அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக்கொள்வார். ஒரு சம்பவத்துக்கு உடன் சேர்ப்பவரை அடுத்த சம்பவத்துக்கு ஈடுபடுத்தாதது இவரது வழக்கம். கடந்த 2001-ல் முத்தையாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய உறவினரான சீனி என்ற சீனிவாசகத்தை கொலை செய்ததன் காரணமாக ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.   ............................   இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி திபேனிடம் பேசினோம், “தமிழகத்தில் ஒரு ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்குகூட, 20 நாட்கள் அவகாசம் எடுத்து அந்தப் புலியை உயிருடன் பிடித்திருக்கிறது வனத்துறை. ஆனால், ஸ்ரீபெரும்புதூரிலும், தூத்துக்குடியிலும் குற்றவாளியை ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்கொலை செய்திருக்கிறது காவல்துறை. சுடப்பட்ட துரைமுருகன்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ’எச்சரிக்கை விடுத்தோம். அதையும் மீறி எங்களை அரிவாளால் தாக்கினார் அதனால் தற்காப்புக்காகச் சுட்டோம்’ என்கின்றனர் போலீஸார்.

#Vikatan, #HenriTiphagne, #Thoothukudi, #Encounter, #FakeEncounter, #EncounterDeath, #EncounterKilling
15 Oct 2021 சை கோ கொலைகாரனா துரைமுருகன்? போலீஸ் என்கவுன்டர்பின்னணி என்ன? People's Watch in Media Madurai

தூத்துக்குடியில் முத்தை யாபுரம் பகுதியில் போலீசாருடன் நடந்த மோதலில் தொடர் குற்றச்செயல்களில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர்ஒரு சைகோ கொலைகாரன் என்று போலீஸ் தரப்பும் இந்த என்கவுன்டரே போலியானது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர். என்ன நடந்தது? தூத்துக்குடி அடுத்துள்ள கூட்டாம்புளி காமராஜ் நகரை சேர்ந்தவர்துரைமுருகன் (39). இவர்மீது 7 கொலை வழக்குகள், 21 கொள்ளை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சர்த்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் துரைமுருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்துத் தனிப்படை சார்புர் ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்த போலீசார் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அப்போது துரைமுருகன் காவலர்களை அரிவாளால் தாக்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சார்பு ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் டேவிட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்துத் தங்களை தற்காத்துத் கொள்ள துரைமுருகன் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி தோட்டாட் பாய்ந்து உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்தது. இது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர் துணைகாவல் கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைநடத்தினர். மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.ர்பின்னர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த துரைமுருகனின் சடலத்தை உடல் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காயம் அடைந்த காவலர்களை அவர்கள் சேர்க்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று தென் மண்டல ஐஜி அன்பு, நெல்லை சரக டிஐஜி பிரேம்குமார் அபினவ் ஆகியோர் நலம் விசாரித்தார். யார்இந்த துரைமுருகன்? இந்த சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "துரைமுருகன் பணத்திற்காக ஆட்களை கடத்தி பின் கொலை செய்வதை தொழிலாகக் கொண்டவர். 2001ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். பின் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட கள்ள தொடர்பால் அந்த பெண்ணுக்காக அவரின் கணவர், உறவினர்கள் என 3 பேரை கடத்தி அவர்களை கொடூரமாக வெட்டிகொலை செய்தான். 2010ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஒரு கொலை வழக்கு, 2011ஆம் ஆண்டு மதுரை ஒத்தக்கடையில் ஒரு கொலை வழக்கு என மொத்தமாக 8 மாவட்டங்களில் அவர் மீது 35 வழக்குகள் உள்ளன. இதில் ஏழு கொலை வழக்குகள் அடங்கும்.கொலை செய்வதற்கு முன்பு கொலை செய்ய வேண்டிய நபரை கடத்தி 15 நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துத் மிரட்டி பணம் பறித்துத் விட்டு பின் அந்த நபரை வெட்டி கொலை செய்து புதைத்து விடுவது துரைமுருகனின் பாணி. அவர் ஒரு சைக்கோ கொலைகாரன்," என்றார். குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டவர் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை சிறையில் இருந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் கடந்த 7ஆம் தேதி பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முதல் குற்றவாளி துரைமுருகன் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை தனிப்படை தேடி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் துரைமுருகன் தனது கூட்டாளிகளுடன் முத்தையாபுரம் பொட்டல் காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துரைமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் என மூவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்யும் போது துரைமுருகன் தனது கையில் இருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துரைமுருகனும் மற்ற இருவரும் தப்பி ஓடிய நிலையில் காவலர்கள் தற்காப்புக்காக துரைமுருகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் துரைமுருகன் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டின் போது துரைமுருகன் உடன் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவரும் போலீசாரிடம் பிடிபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார் எதிர்க்கும் செயல்பாட்டாளர்கள் இதற்கிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்துத் மக்கள் கண்காணிப்பகம் மண்டல சட்ட அலுவலர் அதிசயகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை என்கவுன்டர் நடைபெற்றது இல்லை. காவல் நிலைய மரணங்கள் மட்டும் அவ்வப்போது நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இரண்டு முறை என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியிலும் என்கவுன்டர்கள் நடந்துள்ளன ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே மனித உயிர்களை பறிக்கின்றன. போலீசாரின் தரப்பில் கேட்கும்போது தற்காப்புக்காக சுட்டோம் என கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று நடந்த சம்பவம் மிகப்பெரிய மனித உரிமை மீறல். காவல்துறை இதனை செய்யக்கூடாது. இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பின் பாவூர்சத்திரம் கொலை வழக்கில் துரை முருகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். காரணம் 2015ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் துரைமுருகன் மீது ரவுடி வரலாற்று பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் துரைமுருகன் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் அதிசய குமார். மேலும், "குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துரிதப்படுத்தி நீதிமன்றம் வாயிலாக உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால் இவ்வாறான நபர்கள் வெளியே வராமல் இருப்பார்கள். அதை தவிர்த்து போலீசாரே நேரடியாக இவ்வாறு தண்டனை கொடுப்பது தவறு. இது ஒரு போலி என்கவுன்டர்," என்றார் அதிசயகுமார். காவலர்கள் மீது ரவுடிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இந்த மாதிரியான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட துரைமுருகன் உடலை தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டுதலின்படி உரிய மருத்துவர்கர்ளைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்துத் காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் மண்டல சட்ட அலுவலர் அதிசய குமார் வலியுறுத்தினார். துரைமுருகன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து அவரது குடும்பத்தினர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனரா என கருத்துத் கேட்பதற்காக பிபிசி தமிழ் முயன்றபோதும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்துத் துரை முருகனின் குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கும்பட்சத்தில் அதை இந்த செய்தியில் பதிவுசெய்கிறோம். தொடரும் என்கவுன்டர்கள் இதேவேளை, காவல்துறை குற்றவாளிகளை என்கவுன்டர் மூலம் கொல்லும்போது பெரும்பாலானவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால், இம்மாதிரியான கொலைகளை ஆதரிப்பது எதிர்கார் லத்தில் மிக ஆபத்தான நிலைமைக்கு எடுத்துத் ச் செல்லும் என்கிறார்கர் ள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநில கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றபோது கொள்ளையரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். கொள்ளையன் ஜார்க்ண்டு மாநிலத்தை ச் சேர்ந்தவர் என்றும் அவரது கூட்டாளியாக செயல்பட்ட மற்றொருவரை போலீஸார் கைது செய்ததாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், மீண்டும் ஒரு என்கவுன்டர் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது

#BBCTamil, #Encounter, #EncounterDeath, #EncounterKilling, #PoliceAtrocities, #Thoothukudi
14 Oct 2021 திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு - கள ஆய்வு அறிக்கை People's Watch in Media Madurai

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த முர்தஷா ஷேக் என்பவர் 11.10.2021 அன்று காவல் துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு, சம்பவ இடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. சம்பவ சுருக்கம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பென்னலூர் ஊராட்சி,...

#Keetru, #Encounter, #EncounterDeath, #SriperumputhurEncounter, #FakeEncounter, #FactFindingReport
12 Oct 2021 Thief, Shot Dead Near Chennai, Tried To Kill Cop: Police Amid Questions People's Watch in Media Madurai

Investigators have identified him as Murtuja Shekh from Jharkhand. His aide too has been arrested. Chennai: A 28-year-old man - accused of theft - was shot dead on Monday in Tamil Nadu's Kancheepuram district, around 75 km from Chennai,...

#NDTV, #Encounter, #EncounterDeath, #EncounterKilling, #SriperumputhurEncounter
18 Sep 2021 ‘Collect details of convicts who have not filed appeal’, Madurai Bench directs TNSLA People's Watch in Media Madurai

Madurai Bench of the High Court asks TNSLA to undertake the exercise and submit a report The Madurai Bench of the Madras High Court on Friday directed the member-secretary of the Tamil Nadu State Legal Services Authority...

#TheHindu, #HighCourt, #HighCourtOrder, #LegalServicesAuthority, #TNSLA, #TamilNaduStateLegalServicesAuthority, #DistrictLegalServicesAuthorities, #DLSA
16 Sep 2021 300 caste killings in TN, 13 convictions in five years: RTI data People's Watch in Media Madurai

In the 30 years until December 2020, the State Vigilance Monitoring Committee, that is to meet twice a year, has met only three times, he added. MADURAI: An RTI-based data collection carried out since January by the executive...

#Dalit, #IndianExpress, #DalitRights, #RTI, #Activist, #RightToInformation
15 Sep 2021 Bring a ‘logical end’ to 2018 anti-Sterlite protest case: HC People's Watch in Media Chennai

Taking a note that the CBI is also probing the case, the court said, “The matter should be brought to its logical end, as expeditiously as possible, to give a meaningful closure to the matter, and the circumstances in...

#HindustanTimes, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
14 Sep 2021 Drop all cases against anti-Sterlite protestors: Madras HC People's Watch in Media Chennai

The Madras High Court on Monday directed the authorities concerned to drop all the cases registered against the protestors involved in the anti-Sterlite agitation in 2018, in which 13 persons were killed in alleged police firing, and ensure their...

#DTNext, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate


Join us for our cause