People's Watch in Media
முதலாளித்துவ சனநாயக நாட்டில் அரசதிகாரத்தின் மீறல்களைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்போர் மீது பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதென்பது புதிதல்ல. வாடிக்கையான ஒன்றே! இந்த வரிசையில் இப்போது மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசதிகாரம் பாய்ந்துள்ளது. மனித உரிமைத் தளத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்திய அரசமைப்பினுடைய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடுநிலையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாய் முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி சேதி வெளியிட்டன. இது மக்கள் கண்காணிப்பகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே உண்மையை உலகறிய உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியம். .................................
10 லட்ச ரூபாய் கொடுத்தால் போதுமா? - நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் - அறக்கலகம் டிவிக்கு திரு. ஹென்றி திபேன் அவர்களின் பேட்டி
மக்கள் கண்காணிப்பகத்தில் CBI Raid குறித்து ஹென்றி திபேன் அவர்கள் ARAKALAGAM Youtube சேனலுக்கு அளித்த பேட்டி Video Courtesy: Arakalagam TV
கடந்த 08.01.2022 சனிக்கிழமை அன்று காலை சுமார் 10.02 மணியளவில் சென்னை சிபிஐ (பொருளாதார குற்றப்பிரிவு) டிஎஸ்பி தலைமையில் பத்து அதிகாரிகள் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தை சோதனையிட்டனர். மதுரை முதன்மை குற்றவியல் நடுவர் (Chief Judicial Magistrate) நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 07.01.2022 தேதியிட்ட “சோதனையிடல் உத்தரவை” (Search Warrant) காண்பித்தனர். அதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலான மக்கள் கண்காணிப்பகத்தின் வெளிநாட்டு நிதி வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்டனர். (06.01.2022 அன்று சிபிஐ மக்கள் கண்காணிப்பகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது என்பது பின்னர் தெரிய வந்தது.) முதல் தகவல் அறிக்கையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட நிதி, பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120 (B), 420, மற்றும் FCRA சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ......................................
மக்கள் கண்காணிப்பகத்தை (Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை
மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடா்பாக மதுரையைத் தலைமையிடமாகக் கொ ண்டு இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மீது சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை சொக்கிகுளத்தில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1985இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில் அறக்கட்டளையில் கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிதி பரிவா்த்வா்த்தனைகளை மத்திய புலனாய்வுத்துத்துறை ஆய்வு செய்தது. இதைத்தொடா்ந்து அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் கடந்த 2005- 2006, 2010- 2011 மற்றும் 2012- 2013 காலகட்டட் த்தில் வெளிநாடுகளில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் நன்கொடை பெற்றுள்ளதாக, சென்னை மத்திய புலனாய்வுத்துத்துறையின் கீழ் இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டட் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாடா் க மதுரையிலுள்ள தொண்டு நிறுவனத்தில் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினா்.