People's Watch in Media
தமிழர்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் மதவாத அமைப்புகள் வால் நறுக்கப்படும்: திருமாவளவன் எச்சரிக்கை மதுரை: மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மதகலவரத்தை தூண்டும் முருக பக்தர் மாநாட்டை கண்டித்து நேற்று மனித சங்கிலி நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்புறம் துவங்கி தமிழ் சங்கம் வரையிலும் நடந்த மனிதச்சங்கிலியின் போது கைகளில் பேனர்களுடன், ‘அரசியலில் மதத்தை கலக்காதே’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், திக, விசிக, தமிழ்புலிகள், ஆதி தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பேசினர். இதில், நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி பிரகடனம் வெளியிட்டு திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத வெறுப்பை மக்களிடம் விதைத்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்துள்ளனர்.
People of Tamil Nadu will defeat Sangh Parivar politics, says VCK chief Thirumavalavan Thirumavalvan said through the human chain protest organised by the Madurai Federation for Religious Harmony, people of TN are conveying to the world that they...
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது- திருமாவளவன் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருப்பரங்குன்றம்: சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளி வாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சனைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதன்பின் அவர் கூறியதாவது:- ...................
முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் மனித சங்கிலி போராட்டம் – திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்பு! முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வேண்டும், முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் மதுரை ராஜா முத்தையா மன்றம் பகுதியில் இருந்து காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் மக்கள் அதிகாரம் கழகம், தமிழ் புலிகள் கட்சி, திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட தமிழர் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தன. மேலும் இதில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைக் சார்ந்த குழந்தைகள் ஒற்றுமையாக வருவது போல அழைத்து வரப்பட்டு மனித சங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் வருகிற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Attempt being made to disturb Madurai’s tradition of social harmony Madurai has a tradition of social harmony where equality and brotherhood is followed. The Sangh Parivar is conducting the Lord Murugan devotees conference in Madurai to disturb this...
BJP bid to create unrest via Murugan meet: Thiruma Madurai: VCK president Thol Thirumavalavan has accused BJP and Sangh Parivar of trying to use the names of Hindu deities to create unrest and disrupt religious harmony in various...
What RTI data reveals about custodial torture, lack of CCTV facilities in Tamil Nadu’s police stations While the Tamil Nadu police has been consistently lauded as among the best in the country, recent RTI information revealed that in...
‘Provide protection to activist under Witness Protection Scheme’ Principal District Judge S. Sivakadatcham has ordered protection to Madurai-based activist M. Gnanasekaran of Vadipatti who was facing threat from quarry operators. Gnanasekaran participated in protests against...
பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர் நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார்.அம்பை சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பல்வீர்சிங் ஐபிஎஸ் 2023ல் பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. .................................................................... பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மாடசாமி என்பவர் இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி சத்யா பெற்றுக் கொண்டு சிபிசிஐடி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் மனித உரிமை வழக்கு குறித்து முன் கூட்டியே தெரிவிக்காததால், நீதிபதி சத்யா சிபிசிஐடி போலீசாரை கடிந்து கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
