for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர்

நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார்.அம்பை சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பல்வீர்சிங் ஐபிஎஸ் 2023ல் பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

....................................................................

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மாடசாமி என்பவர் இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி சத்யா பெற்றுக் கொண்டு சிபிசிஐடி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் மனித உரிமை வழக்கு குறித்து முன் கூட்டியே தெரிவிக்காததால், நீதிபதி சத்யா சிபிசிஐடி போலீசாரை கடிந்து கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Full Media Report



Join us for our cause