for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

27 Apr 2023 கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களை மிரட்டிய அரசு செவிலியர் | மக்கள் கண்காணிப்பகம் முயற்சியால் அரசு இடம் People's Watch in Media Chengalpattu

மக்கள் கண்காணிப்பகம் எடுத்த முயற்சியால், அச்சரப்பாக்கம் மதூர் கிராமத்தை விட்டு கிராம செவிலியரால் வெளியேற்றப்பட்ட பழங்குடி இருளர் இரவி குடும்பத்திற்கு போர்க்கால அடிப்படையில் இன்று 27.4.2023 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

##People'sWatch, ##AseerVatham, ##Aseer, ##மக்கள்கண்காணிப்பகம், ##ஆசீர்வாதம், ##ஆசீர், ##கொத்தடிமைத்தொழிலாளர்கள், ##கொத்தடிமை, ##BondedLabours
19 Apr 2023 பல்வீர்சிங்கை கைது செய்யாதது ஏன்? கேள்விகளை DGP அவர்களை நோக்கி வைக்கிறார் ஹென்றி திபேன்! People's Watch in Media Madurai

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவருமான ஹென்றி திபேன் அவர்கள் பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களை நோக்கி வைக்கிறார். @MadrasReview

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
18 Apr 2023 பல் பிடுங்கிய விவகாரம்: ஐஏஎஸ் அமுதாவிடம் 11 பேர் சாட்சியம் People's Watch in Media Tirunelveli

அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களிடம் வார்த்தையில் கூற முடியாத அளவுக்கு கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்தி வெளியானதும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அதோடு, சார்ஆட்சியர் விசாரணை நடத்தியதும் ஏற்புடையதல்ல. காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் செயல்படுவதை ஆட்சியர் கண்காணிப்பது அவசியமானது. அதிலும் திருநெல்வேலி ஆட்சியர் கவனம் செலுத்தவில்லை.   பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகே, ஏஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை ஐஜி அந்தஸ்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு முறையாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்நிலை சிகிச்சை வழங்க வேண்டும் என்றார்.

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங் #காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்
18 Apr 2023 பல்பிடுங்க மறைவிடங்கள்..? அம்பை காவல்நிலையத்தில் ஆய்வு நடத்திய வழக்கறிஞர்..! People's Watch in Media Tirunelveli

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹென்றி திபேன், "இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அம்பாசமுத்திரம் காவல் 4 நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன்" என்று கூறினார். இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.18) அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வு செய்தார். காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை. கழிவறை என அனைத்து இடத்திலும் ஆய்வு செய்தார். வழக்கறிஞரின் இந்த திடீர் ஆய்வால் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

#மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne, ##BalVeerSingh, ##ASPBalveer, ##BalveerSinghIPS, ##CustodialTorture, ##PoliceTorture, ##Ambasamudram, ##பல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங் #காவல்சித்திரவதை, ##அம்பாசமுத்திரம், ##காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம்


Join us for our cause