People's Watch in Media
இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்திற்கு, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், ஹென்றி திபேன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அருண்குமாரின் சகோதரர், 17 வயது சிறுவன், அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், மாடசாமியுடன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்கள் ஏடிஎஸ்பி சங்கரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘ஐஜி தலைமையிலான அதிகாரியின் மேற்பார்வையில் விசரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணைக்கு சாட்சிகள் ஒத்துழைப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் விசாரணை நேற்று நடைபெறவில்லை.
வழக்குரைஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புகார் அளித்துள்ள அருண்குமார் வெளியூரில் வசித்து வருவதால், விசாரணைக்கு வர இயலவில்லை. நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் அளிக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை வழக்கின் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெறும். நாங்கள் அச்சமின்றி சாட்சி சொல்ல வர முடியும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்போம் என எழுத்துப் பூர்வமாக மனு அளித்துள்ளோம் என்றார்.
