for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

18 Sep 2022 கரூர் | அனுமதி பெறாமல் இயங்கும் கல் குவாரிகள் - உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட தகவல்கள் People's Watch in Media Karur

இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் இக்குழுவினர் தெரிவித்தது: ஜெகநாதன் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கூட்டுச்சதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல் குவாரிகள் செயல்படுவதற்கான அனுமதி குறித்து, குவாரிகளின் முன்பு எந்த விவரமோ, அறிவிப்போ இல்லை. இது மிகப்பெரிய சட்டவிரோதம். ஆட்சியர் சொல்லும் பட்டியலை மட்டுமே ஏற்காமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி பெறாத கல் குவாரிகள் குறித்து தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். குவாரிகளில் 350 அடிக்கு மேல் பாதாள குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்தும், அனுமதி பெற்ற கல் குவாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கரூரில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்த எங்களின் ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். சட்டப்பேரவையில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

#KarurHRDJaganathan, #JaganathanMurder, #HenriTiphagne, #AbdulSamad, #HRDAFactFinding
17 Sep 2022 கரூர் மாவட்டத்தில் கல் குவாரிகளில் முறைகேடு People's Watch in Media

மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது. கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் . பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்

#சமூகச்செயற்பாட்டாளா்கள், #கல்குவாரி, #PUCLபாலமுருகன், #PUCLBalamurugan, #ChristinaSamy, #HenriTiphagne, #அப்துல்சமது, #மணப்பாறைசட்டமன்றஉறுப்பினர், #AbdulSamad, #ManapparaiMLA
17 Sep 2022 Fact-finding team seeks fair and free probe into the murder of activist People's Watch in Media Karur

A fact-finding team on Saturday urged the Tamil Nadu government to expedite the investigation into the recent murder of activist R. Jaganathan of Kalipalayam in Karur district, who was run over by a truck belonging to a stone quarry...

#activistJaganathan, #ManapparaiMLA, #AbdulSamad, #Fact-finding
30 Aug 2022 புதுவையில் ஆர்ப்பாட்டம் People's Watch in Media

புதுச்சேரியில் அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று காலை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

#JAACT, #HenriTiphagne, #JointActionAgainstCustodialTorture, #காவல்சித்திரவதைக்குஎதிரானகூட்டியக்கம், #நீதிபதிஅருணாஜெகதீசன், #நீதிபதிஅருணாஜெகதீசன்அறிக்கை, #HRCPS


Join us for our cause