for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

1 Sep 2025 பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்; தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! People's Watch in Media Madurai

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்; தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல் சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவால் நேற்றுடன் (31.08.2025) பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.  அதனைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் டிஜிபி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில், “ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு முன், அடுத்த டிஜிபியாக பதவியேற்க உள்ளவரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னதாக யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சார்பில் வழக்கறிஞர் பிரசன்னா என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், “பிரகாஷ் சிங் வழக்கில் அளித்த தீர்ப்பிற்கு மாறாக தமிழ்நாடு அரசு தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் நடந்து கொண்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்” எனத் தெரிவித்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

##Nakkeeran, ##HC, ##Court, ##dgp, ##DGPVenkatraman, ##TNPolice, ##CM, ##TNCM, ##MKStalin, ##dmk, ##HenriTiphagne
1 Sep 2025 பொறுப்பு டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு People's Watch in Media Madurai

பொறுப்பு டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு புதுடெல்லி, தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழக காவல்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, தீயணைப்பு துறை இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கி, அதன் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கி, அதன் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக, நிர்வாக பிரிவு டி.ஜி.பி.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வெங்கட்ராமன் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருப்பதாகவும், எனினும் கோர்ட்டை அவமதிக்கும் விதமாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில், அவமதிப்பு வழக்கு இவ்விவகாரத்தில் தாக்கலாகியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

##DailyThanti, ##HC, ##Court, ##dgp, ##DGPVenkatraman, ##TNPolice, ##CM, ##TNCM, ##MKStalin, ##dmk, ##HenriTiphagne
1 Sep 2025 தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் பதிவான அவமதிப்பு வழக்கு! அடுத்து என்ன நடக்கும்? People's Watch in Media Madurai

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் பதிவான அவமதிப்பு வழக்கு! அடுத்து என்ன நடக்கும்?   தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது நியமனத்திற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்த கூடாது என எச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருந்தது. …………………………………………………….. ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சமூக ஆர்வலர் ஹென்றி திபேன், வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், மாநில டிஜிபி நியமனங்களில் "பொறுப்பு" என்ற இடைக்காலப் பதவியை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவைக் கடந்து, தமிழக அரசு சட்டத்தை மீறும் வகையில் இந்த நியமனத்தை செய்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

##TimesofIndia, ##TamilSamayam, ##HC, ##Court, ##dgp, ##DGPVenkatraman, ##TNPolice, ##CM, ##TNCM, ##MKStalin, ##dmk, ##HenriTiphagne
21 Aug 2025 ‘Manipur Violence was Not Spontaneous, But Plannedand Ethnically Targeted’: PUCL Report People's Watch in Media Madurai

‘Manipur Violence was Not Spontaneous, But Plannedand Ethnically Targeted’: PUCL Report New Delhi: The People’s Union for Civil Liberties (PUCL) on August 20 released the Independent People’s Tribunal on the Ongoing Ethnic Conflict in Manipur at the PressClub of India, New Delhi....

##TheWire, ##ThePeoplesUnionforCivilLiberties, ##PUCL, ##EdgarKeiser, ##HenriTiphagne
16 Aug 2025 HC Seeks Report on Restoration of Abandoned Mines People's Watch in Media Madurai

HC Seeks Report on Restoration of Abandoned Mines

##ToI, ##TimesofIndia, ##HC, ##HighCourt, ##MaduraiBench, ##AdvSatiamoorthi, ##HenriTiphagne


Join us for our cause