People's Watch in Media

Chennai: While the custodial death of V Vignesh is being investigated by a judicial magistrate and the CB-CID separately, the forum for Joint Action Against Custodial Torture-Tamil Nadu, made the brothers of the deceased, and the auto driver, narrate the...

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும். விக்னேஷ் இறுதிச் சடங்குக்காக போலீஸார் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக பணம் தரவேண்டும்? அரசும் ஏன் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, இனியும் காவல் நிலைய மரணங்கள் நடக்காமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விக்னேஷின் சகோதரர்களுக்கு ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

Vignesh, 22, of Pattinapakkam, chennai, died unexpectedly while being questioned at the police station. In this context, People's watch Director Henry Thieben, human rights activists Sudharamalingam, BS Ajitha, and Jimraj Milton told reporters in chennai yesterday on behalf of...

After nearly 10 days of Vignesh's alleged custodial death, the key eyewitness in the case and the deceased's family gave details about the case and demanded justice. The deceased's counsel too raised a few questions and demanded...

A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25, in a city police station recently and said that it was a clear...

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தங்கள் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதாக மிரட்டியதாக பலியான விக்னேசின் சகோதரர் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது சகோதரர் வினோத் உடற்கூராய்வுக்குப் பிறகும் கூட விக்னேசின் உடலைப் பார்க்க குடும்பத்தினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் புகார் கொடுக்காமல் இருக்க எனக்கு ரூ ஒரு லட்சம் தருவதாக காவலர்கள் கூறினார்கள். எனது சகோதரர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடற்கூராய்வுக்குப்பின் உடலைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார் விக்னேசின் சகோதரர் வினோத். அது மட்டுமல்லாமல் எங்கள் வீட்டின் உரிமையாளரிடம் காவலர்கள் மிரட்டி உடனடியாக எங்களை வீட்டை காலி செய்யச் சொல்லுமாறும் கூறியுள்ளனர் என்றும் வினோத் குற்றம் சாட்டியுள்ளார்.

He also countered the police's claims that his brother had died of 'fits', asserting that he never suffered from the problem throughout his life. In a key development in the Chennai custodial death case, the family of the victim...

The committee demands arrest of police personnel responsible for the man’s death A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25,...

A week after a 25-year-old youth died after allegedly being beaten up at a police station in Chennai, Tamil Nadu, his brother claimed the police offered the family Rs 1 lakh to remain silent on the case. V...