for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கார்ப்பரேட் நிறுவனத்திற்காக துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து People's Watch in Media Chennai

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித  உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை .தாக்கல் செய்தார். துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான விசாரணையை நீதிமன்றம்  என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சீலிடப்பட்ட அறிக்கை ஒன்றை மணி உரிமைகள் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நக்கலாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட கூடாது என்றும் 3 தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கருத்து கூறுகையில், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

#Dinasuvadu, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜன நாயகத்தின் மீது விழுந்த வடு People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  ஜன நாயகத்தின் மீது விழுந்த வடு

#ETVBharat, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 Sterlite Protests - 'State Must Be Seen To Be With The Families, Not An Adversary': Madras HC Orders State To Provide Compensation, Assistance To Victims and Their Kin People's Watch in Media Chennai

  The Madras High Court on Monday issued a host of directions to the State government for the rehabilitation of the victims and their families of the 2018 incident of police firing that had followed the Sterlite Protests...

#LiveLaw, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: நீதிமன்றம்! People's Watch in Media Chennai

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்...

#Metropole.in, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
12 Sep 2021 இந்திய வம்சா வழியைச் சேர்ந்த 30 ஆயிரம் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை People's Watch in Media Chennai

சென்னை: மலையக-தாயகம் திரும்பியோருக்கான இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் கந்தையா, மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், என்சிஎச்ஆர்ஓ தேசிய தலைவர் பேராசிரியர் மார்க்ஸ், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழந்தைசாமி, இளம்பரிதி, இளந்தமிழகம் மற்றும் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த பிரநிதிகள் செந்தில் ஆகியோர் கலந்து ெகாண்டனர். குடியுரிமை கோருவோரில் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வாழும் இலங்கை தமிழ் ஏதிலிகள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் என்றும் அதில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குமாறும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

#Dinakaran, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
24 Aug 2021 Tuticorin firing: Plea to expedite inquiry People's Watch in Media Thoothukudi

Tuticorin: The 29th sitting of one-member commission of inquiry headed by retired Justice Aruna Jagadeesan into the police firing that claimed 15 lives during the anti-Sterlite protest on May 22, 2018, began here on Monday. 58 people have been...

##TimesofIndia, #PoliceFiring, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry
24 Aug 2021 `துப்பாக்கிச்சூடு நாளில் பணியிலிருந்த உயர் அதிகாரிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை!' - ஹென்றி திபேன் People's Watch in Media Thoothukudi

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து மூன்றாண்டைக் கடந்த நிலையில் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அன்று தினத்தில் பணியில் இருந்த உயர்அதிகாரிகள் ஒருவர் கூட இன்னும் விசாரிக்கப்படவில்லை” என ஹென்றி திபேன் கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான...

#Vikatan, #ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofEnquiry, #HenriTiphagne
24 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணையை விரைவுபடுத்த மனித உரிமைகள் வழக்கறிஞர் கோரிக்கை People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விரைவில் அதன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி கோரியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. ...

#BBCTamil, #HenriTiphagne, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionofInquiry, #ThoothukudiPoliceFiring
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்!! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு உயிரழப்பு, காயங்கள் ஏற்பட்டன. மேலும் பொது மற்றும் தனியார்  சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில் தனது இடைக்கால அறிக்கையை அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தார். ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

#Dinamani, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #Thoothukudi, #CommissionofInquiry
23 Aug 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! People's Watch in Media Thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும் இறந்த 13 நபர்களின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ அரசின் மீதும் காவல்துறை மீதும் வழக்கு தொடுத்தனர். இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.இவரது தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் சமீபத்தில் தனது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தார். இந்த விசாரணை ஆணையம் பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 28 கட்டங்கள் விசாரணை நடந்து முடிந்துள்ளது.இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக இன்று 29 கட்ட விசாரணை நடக்க இருக்கிறது.இந்த விசாரணைக்கு ஹென்றி திபேன் மற்றும் 57 நபர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த விசாரணையில் முக்கிய வாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#News4Tamil, ##ThoothukudiPoliceFiring, #CommissionofInquiry, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #HenriTiphagne


Join us for our cause