People's Watch in Media
எல்லா உரிமைகளை விட மேலானது மனித உரிமை பழங்குடி மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன்சாமி சிலை திறப்பு திருச்சி, ஜூலை 6 - பழங்குடி மக்களின் உரிமை களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஸ்டேன்சாமியின் சிலை திறப்பு விழா மற்றும் ஜனநாயக எழுச்சி மாநாடு சனிக்கிழமை மாலை திருச்சி விரகாலூரில் நடை பெற்றது. மாநாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார். ஸ்டேன்சாமி யின் சிலையை நாடாளுமன்ற உறுப் பினர்கள் தொல்.திருமாவளவன் மற் றும் மு.க.கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சவுந்தரபாண்டியன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ. இருதயராஜ் எம் எல் ஏ, மனித உரிமைக்காப்பாளர் கூட்டமைப்பு ஹென்றிடிபேன், திராவிடர் விடுதலைக்கழக தலை வர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக்கழகம் தேசிய செய லாளர் ச.பாலமுருகன் மற்றும் ஆயர்கள் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பழங்குடிகளின் துணைவராக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் பெ.சண் முகம் தனது உரையில், “விரகலூர் என்ற இந்த சின்னஞ்சிறிய கிரா மத்தில் இருந்து ஏராளமான பாதிரியார்களை அனுப்பி இருக் கிறீர்கள். எல்லாவற்றையும் துறந்து மக்களுக்காக சேவை செய்வ தற்காக தன்னுடைய குழந்தை களை இல்லங்களில் இருந்து பிரித்து அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான விஷ யம் அல்ல” என்று கூறினார். “பழங்குடி மக்களுடைய உற்ற துணைவன் தோழர் ஸ்டேன்சாமி, மக்களுக்காக தன்னை அர்ப்ப ணித்துக் கொள்வது என்பது அவ்வ ளவு சுலபமான விஷயம் அல்ல. ........................................................................
31 கொடூரங்கள்! முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை? உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடுரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது..." - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை! போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 'யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்' எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், 'தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..? என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், அஜித்குமாரின் மரணத்தில் என்ன நடந்தது... காவல் மரணங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன.. காவல்துறையைக் கட்டுப்படுத்த ஏன் தவறுகிறார் முதல்வர்..? ........................................................................
அடித்தே கொலை !! முதல்வர் எடுத்த முடிவு தவறு - வழக்கறிஞர் ஹென்றி திபேனுடன் பேட்டி !! திருபுவனம் இளைஞர் அஜித்குமார் போலீசால் தாக்கப்பட்டு இறந்து போன விஷயத்தை மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன் சமூக அக்கறை உள்ள ஒரு மனித நேயர் அவருடன் ஒரு பேட்டி :- 1. அஜித்குமார் குற்றவாளியா ? நகை திருடினார் என்பது உண்மையா ? அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டியது போலீஸ் வேலை. எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அது பற்றி போலீஸ் இதுவரை எந்த தகவலும் சொல்லவும் இல்லை. .......................................................................
