for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

23 Dec 2021 HC dissatisfied with CB-CID probe into custody death in 2019 People's Watch in Media Madurai

Madurai: Madras high court on Tuesday expressed dissatisfaction at the CB-CID investigation into the 2019 Avaniyapuram custodial death case in Madurai district. A division bench of acting chief justice Munishwar Nath Bhandari and Justice Pushpa Sathyanarayana observed that the...

##Avaniyapuram, #CustodialDeath, #CustodialTorture, #HenriTiphagne, ##HighCourtOrder, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan, #MaduraiBench
22 Dec 2021 நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி 22.12.2021 People's Watch in Media Chennai

“நீதிபதிகள் நியமனமும் - சமூகநீதியும்“ நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது? வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? SathiyamTV சத்தியம் டி.வி. - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி 22.12.2021 Video Courtesy: SathiyamTV

#SathiyamTV, #Debate, #DebateShow, #SathiyamSathiyame, #JudgesAppointment
22 Dec 2021 HC dissatisfied with probe into custodial death case People's Watch in Media Madurai

Expressing dissatisfaction over the progress made in the investigation into the 2019 Avaniapuram custodial death case, the Madurai Bench of the Madras High Court on Tuesday observed that there was not only a delay but also lapses on the...

#TheHindu, #Avaniyapuram, #CustodialDeath, #HighCourt, ##HighCourtOrder, #MaduraiBench, #CustodialTorture, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan, #HenriTiphagne
22 Dec 2021 போ லீஸ் விசா ரணை யில் மதுரை இளை ஞர் மர்ம மரணம்: சிபிசிஐடி 31-ம் தே திக்குள் குற்றப்பத்திரி க்கை தா க்கல் செய்ய உத்தரவு People's Watch in Media Madurai

மதுரை : போ லீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரி க்கை தா க்கல் செ ய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுட் ள்ளது.   மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன். இவரைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனிடையே, காவல் நிலையத்தில் இருந்து பாலமுருகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, விசாரணையின்போது போலீஸார் பாலமுருகனை அடித்துத்க் கொலை செய்ததாகவும், மறுபிரேதப் பரிசோதனை நடத்தவும், இழப்பீடு வழங்கக் கோரியும் பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் சில நாட்கட்ளிலேயே திடீரெ ன தனது மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், போலீஸாரி ன் அச்சுறுத்தல் காரணமாக முத்துக்கருப்பன் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்றும், முத்துக்கருப்பனை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த மனு குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. மேலும் பாலமுருகன் மரணம் தொ டர்பான வழக்கை சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், இளைஞர் பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி , நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், போலீஸாருக்கு போலீஸார் உதவி செய்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், டிசம்பர் 31- ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துத் உத்தரவிட்டனர்.

#CustodialTorture, #PoliceTorture, ##CustodialDeath, ##BalamuruganCustodialDeath, #Avaniyapuram, #AvaniyapuramBalamurugan, #HighCourtOrder, #HighCourt, #MaduraiBench
22 Dec 2021 போலீஸ் விசாரணையில் மரணம்; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு: உயர்நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai

மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் டிரைவர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் டிச.,31க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சோலையழகுபுரம் முத்து கருப்பன்,'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு கடிதம் வந்தது. இதனடிப்படையில் பதிவாளர்,'சம்பவம் தொடர்பாக வழக்கு பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். இதை தானாக முன்வந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள் உத்தரவின்படி ஆதிநாராயணன் (மருது சேனை கட்சி தலைவர், அ.ம.மு.க.,கூட்டணியில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர்), மதுரை அகிம்சாபுரம் கதிர்வேல், சோலையழகுபுரம் ரமேஷ்குமார், வண்டியூர் யோகநாதன் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே விசாரணையில் முத்துக்கருப்பன் தரப்பு,'போலீசார் தாக்கியதில் பாலமுருகன் இறக்கவில்லை. விபத்தில் காயமடைந்து இறந்தார்,' என தெரிவித்தது.பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு: வழக்கு விசாரணை ஜூனில் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆடியோ பதிவிலுள்ள குரல் மாதிரியை பரிசோதிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை. ஜன.,31 வரை கால அவகாசம் தேவை எனக்கூறி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 'சீல்' இட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது. நீதிபதிகள்: இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். விசாரணை 2 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை. தாமதமின்றி விசாரணையை முடித்து டிச.,31 க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேல் விசாரணையின்போது தேவையெனில் துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யலாம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

#Dinamalar, #PoliceTorture, #CustodialDeath, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #HighCourt, #MaduraiHighCourt, ##HighCourtOrder
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கு: டிச. 31-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவ People's Watch in Media Madurai

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தை ச் சோ்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக, அவனியாபுரம் போலீஸாா் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அதன்பின்னா் பாலமுருகன் உயிரிழந்துள்ளாா். போலீஸாா் அடித்துத் துன்புறுத்தியதால் அவா் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துத் கருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றளாா் போலீஸாா் அச்சுச் றுத்தல் காரணமாக முத்துத் கருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞா் ஹென்றிடிபேன், உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதினாா். அதனடிப்படையில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே வழக்கு விசாரணையை உயா்நீயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணாஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குத் தொடா்பாக டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

#Dinamani, #Avaniyapuram, #AvaniyapuramPS, #CustodialDeath, #PoliceTorture, #BalamuruganDeath, #BalamuruganCustodialDeath
22 Dec 2021 File chargesheet in Avaniyapuram custodial death case by Dec 31: Madras HC People's Watch in Media Madurai

Warning that the court would not be liberal if the delay continues, the judges gave a deadline of 10 days for the CB-CID to complete the investigation and file chargesheet by December 31. MADURAI: Dissatisfied with the progress...

#IndianExpress, #TheNewIndianExpress, #HighCourt, #CustodialDeath, #Balamurugan, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : "விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை People's Watch in Media Madurai

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் குறித்த விசாரணையை முடித்து, வரும் 31-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் பாலமுருகன் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன்...

#ThanthiTV, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #CustodialDeath, #PoliceTorture


Join us for our cause