People's Watch in Media
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் இக்குழுவினர் தெரிவித்தது: ஜெகநாதன் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கூட்டுச்சதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல் குவாரிகள் செயல்படுவதற்கான அனுமதி குறித்து, குவாரிகளின் முன்பு எந்த விவரமோ, அறிவிப்போ இல்லை. இது மிகப்பெரிய சட்டவிரோதம். ஆட்சியர் சொல்லும் பட்டியலை மட்டுமே ஏற்காமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி பெறாத கல் குவாரிகள் குறித்து தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். குவாரிகளில் 350 அடிக்கு மேல் பாதாள குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்தும், அனுமதி பெற்ற கல் குவாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கரூரில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்த எங்களின் ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். சட்டப்பேரவையில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது. கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களி டம் அவா் தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம். இதில் ஏராளமா ன கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறை ள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா , குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வை யில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் என்றாா் அவா் . பேட்டியின் போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினா சாமி ஆகியோா் உடனிருந்தனா்
A fact-finding team on Saturday urged the Tamil Nadu government to expedite the investigation into the recent murder of activist R. Jaganathan of Kalipalayam in Karur district, who was run over by a truck belonging to a stone quarry...
2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி... 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
