எல்லா உரிமைகளை விட மேலானது மனித உரிமை
பழங்குடி மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன்சாமி சிலை திறப்பு
திருச்சி, ஜூலை 6 - பழங்குடி மக்களின் உரிமை களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஸ்டேன்சாமியின் சிலை திறப்பு விழா மற்றும் ஜனநாயக எழுச்சி மாநாடு சனிக்கிழமை மாலை திருச்சி விரகாலூரில் நடை பெற்றது. மாநாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார்.
ஸ்டேன்சாமி யின் சிலையை நாடாளுமன்ற உறுப் பினர்கள் தொல்.திருமாவளவன் மற் றும் மு.க.கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சவுந்தரபாண்டியன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ. இருதயராஜ் எம் எல் ஏ, மனித உரிமைக்காப்பாளர் கூட்டமைப்பு ஹென்றிடிபேன், திராவிடர் விடுதலைக்கழக தலை வர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக்கழகம் தேசிய செய லாளர் ச.பாலமுருகன் மற்றும் ஆயர்கள் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பழங்குடிகளின் துணைவராக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் பெ.சண் முகம் தனது உரையில், “விரகலூர் என்ற இந்த சின்னஞ்சிறிய கிரா மத்தில் இருந்து ஏராளமான பாதிரியார்களை அனுப்பி இருக் கிறீர்கள். எல்லாவற்றையும் துறந்து மக்களுக்காக சேவை செய்வ தற்காக தன்னுடைய குழந்தை களை இல்லங்களில் இருந்து பிரித்து அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான விஷ யம் அல்ல” என்று கூறினார். “பழங்குடி மக்களுடைய உற்ற துணைவன் தோழர் ஸ்டேன்சாமி, மக்களுக்காக தன்னை அர்ப்ப ணித்துக் கொள்வது என்பது அவ்வ ளவு சுலபமான விஷயம் அல்ல.
........................................................................
