Media
People's Watch is attested : JOINT STATEMENT OF DEMOCRATIC GROUPS AND CONCERNED CITIZENS - FREE JOURNALIST MOHAMMAD ZUBAIR NOW!
மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் Byமாலை மலர் 29 ஜூன் 2022 3:31 PM மதுரையில் நாளை மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். மதுரை மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அலங்கை செல்வரசு, வி.பி.இன்குலாப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ப.கதிரவன் வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி, அமைச்சர் பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ராமலிங்கம், எவிடன்ஸ் கதிர், ம.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், அ.தி.ம.மு.க. தலைவர் பசும்பொன் பாண்டியன், எஸ். டி .பி. ஐ .மாநில தலைவர் நெல்லை முபாரக், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் சமூக நீதிப் பேரவை மாநில அமைப்பாளர் இரா.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவளவு படுகொலை, அரசியல் அறியாமை, ஆதிகுடியினரின் அரசியல் உரிமை குறித்து கூட்டத்தில் பேசுகின்றனர். முடிவில் புதூர் பரமசிவம் நன்றி கூறுகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கிழக்கு தொகுதி செயலாளர் ஆ.கார்வண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான கருத்தரங்கம்
குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் Popular Front of India சார்பாக கண்டன உரை
குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் திரு. பசும்பொன் பாண்டியன் அவர்களின் கண்டன உரை
குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் திருமிகு. செல்வகோமதி அவர்களின் கண்டன உரை
குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திரு. மெய்யப்பன் அவர்களின் கண்டன உரை