People's Watch in Media
தமிழகத்தில் கொடூர வன்முறையை தூண்டும் வகையில் பாமக பேசி வருகிறது, இதை தமிழக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது, இது சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை அவர் காட்ட வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கூறியுள்ளார். வேறு அரசியல் இல்லை என்பதற்காக பாமக இந்த அராஜக அரசியலை கையில் எடுத்து இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அத்துடன் 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. நாளுக்கு நாள் சூர்யா-- பாமக மோதல் அதிகரித்து வரும் நிலையில் இதில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மக்கள் கண்காணிப்பகள் ஹென்றி டிபேன் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சூர்யா நடித்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் சித்திரவதைகளுக்கு எதிராக குரல், ஜெய்பீம் என்பது சாதிய பாகுபாட்டுக்கு எதிரான குரல், ஜெய் பீம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய குரலாக இந்த படத்தின் மூலம் ஒலித்திருக்கிறது. ஒரு காலத்தில் தலித் மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜெய்பீம் என்ற வார்த்தை தற்போது அனைத்து மக்களுக்குமானதாக மாறியுள்ளது. இந்த படத்தை பார்த்தவுடன் என் கண்கள் குளமாகி விட்டது. இதனால் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பார்க்க வேண்டிய படம், வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், நீதிபதிகள் பார்க்க வேண்டிய படம், அதிலும் குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், காவல்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டிய படம். இப்படிப்பட்ட படத்தை வைத்து பாமக அரசியல் செய்து வருகிறது. ஒரு காலத்திற்காக சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர், அதற்காக கட்சி ஆரம்பித்தவர் மருத்துவர் ராமதாஸ், நான் மறுத்து ராமதாசை நேசித்தவன். அவரை மதித்தவன். பாமகவினர் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். வன்னியர்களுக்காக மட்டும் அவர் பேசவில்லை, கல்வி சார்ந்த விஷயங்களுக்கும், சமூக சார்ந்த விஷயங்களுக்கும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இன்று அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் சூர்யாவின் தாக்குவோம் என்று பேசுகிறார்கள் அதற்கு முதல் கண்டனக்குரல் மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருக்க வேண்டும். அப்படி வரவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கம். இன்னும் கூட காலம் தாழ்ந்து விடவில்லை அவர் இப்போதும் குரல் கொடுக்கலாம், அதே நேரத்தில் வேறு அரசியல் செய்ய காரணமில்லை என்பதால் தற்போது பாமக எடுத்துள்ள இந்த அரசியல் அசிங்கமான அரசியல். ஒரு தலித் இப்படி பேசியிருந்தால் அல்லது ஒரு பெரியாரிஸ்ட் இப்படி பேசி இருந்தால் இந்த காவல்துறை வேடிக்கை பார்த்து இருக்குமா? சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு தருவோம் என்ற நபரை உடனே கைது செய்திருக்க வேண்டாமா? பாமகவின் இந்த வன்முறை அரசியலை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது, முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது, வழக்கு மட்டும் போடுகிற விஷயம் அல்ல இது, இப்படிப்பட்டவர்களை உடனே தூக்கி உள்ளே வைத்திருக்க வேண்டும். இது சமூக நீதி மண், இது பெரியார் மண் என்பதை முதல்வர் ஸ்டாலின் காட்ட வேண்டும். தமிழகமே போற்றிக் கொண்டிருக்கும் இந்த ஜெய் பீம் திரைப்படத்தை வைத்து பிரச்சினை செய்ய வேண்டாம் என பாமகவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படுகிறது.
கோட்டைப்பட்டினம்: மீனவர் சாவு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதினர். இதில் படகு தண்ணீரில் மூழ்கியதில் மீனவர் ராஜ்கிரண் (வயது 30) உயிரிழந்தார். பின்னர் இலங்கையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில்அடக்கம் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவு இந்நிலையில் இறந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன்னுடைய கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ராஜ்கிரணை அடக்கம் செய்யும் போது, அவரது உடலை முழுமையாக பார்க்க அனுமதிக்கவில்லை. ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்று இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்கிரணின் உடலை மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மீனவர் உடல் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். உடல் தோண்டி எடுப்பு இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் நேற்று மீனவர் ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுக்கும் பணியை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற தடயவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன், மணமேல்குடி தாசில்தார் ராஜா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மனுதாரர் தரப்பில் ராஜ்குமார் மனைவி பிருந்தா, மீனவர் காப்போம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தர்மதுரை, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மீண்டும் பிரேத பரிசோதனை பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிபடுத்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தாவை அடையாளம் காட்டச் சொன்னார்கள். ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, எனது கணவரின் 2 கைகளிலும் பச்சை குத்தி இருக்கும் என்று கூறினார். பின்னர் அவர் உறவினர் ஒருவர் அருகே வந்து 2 கைகளையும் பார்த்தார். 2 கைகளிலுமே பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் மறு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ராஜ்கிரண் உடல் மீண்டும் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் வரவில்லை ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரது பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் ராஜ்கிரணின் பெற்றோர்களுக்கு உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் உடல் தோண்டி எடுக்கும் இடத்திற்கு ராஜ்கிரண் பெற்றோர்களோ அல்லது ராஜ்கிரண் உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுகூராய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர். ராஜ்கிரண் (30) எஸ்.சுகந்தன் (30) ஏ. சேவியர் (32) ஆகியோர் அக்.19ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனர். அதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. சுகந்தன், சேவியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அக்.23ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரண் உடல் கடல் வழியாக கொண்டுவரப்பட்டு கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கிரனின் உடலில் காயம் இருப்பதால் இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நவ.3ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் ராஜ்கிரண் மனைவி பிருந்தா உள்ளிட்டோர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பிருந்தா மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மீனவர் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு தடயவியல்துறை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் மறு உடற்கூராய்வை மேற்கொண்டனர். சுமார் இரண்டுமணி நேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
Over 200 civil society leaders have written a joint petition to the Chief Justice of India requesting listing of important pending constitutional matters including CAA, Abrogation of Article 370, farm laws, continued misuse of UAPA etc. “We request...
The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....
A woman from Pudukkottai district has moved the Madurai Bench of the Madras High Court seeking conduct of re-postmortem on the body of her husband who died after falling into the sea when his boat collided with a Sri...
