
பல் பிடுங்கிய பல்வீர்சிங்..டெல்லியில் ராஜமரியாதை! அமுதா ஐஏஎஸ் மீது வழக்கு! பரபர புகார் சொல்லும் ம.க.
மதுரை: காவல் சித்திரவதை தொடர்பான பல்வீர்சிங் ஐபிஎஸ் வழக்கை விசாரித்த பின்னரும் கூட, வழக்கு குறித்த அறிக்கையை இதுவரை வழங்காத அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் எச்சரித்துள்ளார்.
Members of Joint Action Against Custodial Torture – Tamil Nadu, through a press meet here on Saturday, sought compensation and apology for the victims of Ambasamudram custodial torture case.
Henri Tiphagne, Executive Director of People’s Watch, said that the incidents of the horrific crime committed by an IPS officer on the suspects had faded away from the public memory over the period of two years.
காவல்துறை விசாரணையில் அஜித் குமாருக்கு நடந்தது என்ன? – நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்த பகீர் உண்மை
அஜித் குமார் உடலின் 44 இடங்களில் காயங்கள், முகம், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய காவல்துறை.
காவலர்களால் தாக்கப்பட்டு திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையின் போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2025 ஜூன் 27 அன்று நடந்ததாகக் கூறப்படும் நகை திருட்டு சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்பவர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது உயிரிழந்தார்.
....................................................................
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை...
பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி...
காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்...
"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.
..................................................