for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

.......................................................

மனுதாரர் வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மாரீஸ்குமார் வாதிடும்போது, "சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததும் விதிமீறல்தான்.

அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலாளர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் ஒரு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுப்பதாகவும், சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

.....................................................................

Full Media Report



Join us for our cause