for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

பல் பிடுங்கிய பல்வீர்சிங்..டெல்லியில் ராஜமரியாதை! அமுதா ஐஏஎஸ் மீது வழக்கு! பரபர புகார் சொல்லும் ம.க.

மதுரை: காவல் சித்திரவதை தொடர்பான பல்வீர்சிங் ஐபிஎஸ் வழக்கை விசாரித்த பின்னரும் கூட, வழக்கு குறித்த அறிக்கையை இதுவரை வழங்காத அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் எச்சரித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
..........................................................................

இந்த நிலையில், மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் (JM No:1) முன் நிலுவையில் உள்ள நான்கு காவல் சித்திரவதை வழக்குகளில் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் அவருடைய குழுவில் உள்ள 13 பேர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் காவலர்கள் (Constables) கொலையாளிகளாக உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

........................................

Full Media Report



Join us for our cause