மத்திய சிறைச் சாலைகளில் ஊழல்!
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிறைத் துறையில் 15 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் வீடுகள், ஒப்பந்தக்காரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிறைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
....................................................................
சிறைச்சாலைகளில் நடக்கும் மெகா ஊழல் குறித்து மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், "நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே இதுகுறித்து ஆர்.டி.ஐ. மூலம் விளக்கம் கேட்டிருந்தோம்.
ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து எந்த விளக்கமும் பதிலும் இதுவரை கொடுக்கவில்லை. சிறைத்துறை கைதிகள் மூலம் சிறைக்குள் பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகிறது. சிறைக்கைதிகள் பெட் ரோல் பல்க்கே நடத்துகிறார்கள். இப்படி உற்பத்தியாகும் பொருட்கள் தனியார் கடைகள், வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மானிட்டரிங் செய்ய என்ன சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்? அலுவலக விசிட்டராக மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக ஆய்வுசெய்யவேண்டும்.
ஆனால் ஆட்சியர் இதுவரை போனதே இல்லை. சிறைத்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், அந்த நான்கு சுவருக் குள் நடக்கும் விசயம் இரகசியமாகவே வைக்கப்படுகிறது. உயரதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை முறைகேடுகள், ஊழல், மனித உரிமை மீறல் இவையெல்லாம் தடுக்கப்படவேண்டும்" என்றார்