for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர் யாராக இருந்தாலும், ஆண்டி-இந்தியன் பட்டத்தைக் கொடுக்கும் பா.ஐ.க. அரசு, அதன் சட்டப்பூர்வ வடிவத்தை உபா சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறது.  இதன்மூலம், யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று அரசால் முத்திரை குத்திவிட முடியும்.

................

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் நம்மிடம்,   ”மனித உரிமைக்காக பேசுபவர்கள், துhக்கிப்பிடிப்பவர்கள், அதற்காக அமைதியான வழியில் போராடுபவர்களை மனித உரிமைக் காப்பாளர்களாகக் கருதவேண்டும்.  அந்தந்த அரசுகளும் அவர்களின் பணிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று ஐ.நா.வலியுறுத்துகிறது.  அவர்களில் மனித உரிமைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒன்பதுபேரை பீமா-கோரேகான் வழக்கில், உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்து புனே சிiறியல் அடைத்திருக்கிறது இந்த அரசு, ’பிரதமரை கொலை செய்யத் திட்டமிட்டார்கள்’  என்பது அவர்களின் மீதான குற்றச்சாட்டு.  நம்மூர் திருமுருகன் காந்திக்கும் இது தேர்ந்திருக்கிறது. யார் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்புகிறார்களோ,  அவர்களை ஒடுக்குவது தான் உபா சட்டத்தின் உண்மையான நோக்கம்.

Full Media Report



Join us for our cause