for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns


Head constable is a key witness in custodial deaths case




அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை. மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு அனுப்பினால் நீதி கிடைக்க கால தாமதம் ஆகும் என்று, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.




சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளன. அந்த அமைப்பின் சார்பில் தலைவர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




Tamil Nadu custodial deaths 'suggest', rights have gone all wrong in today’s India

.......................................................................




திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியல் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய சித்திரவதை குறித்தான ஆரம்பக்கட்ட கள ஆய்வு அறிக்கையில் கண்டறிந்தவைகளும், பரிந்துரைகளும்.

Full Media Report


சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை, வைரவன்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன், கார்த்திகைச்சாமி (26/17) பெரியக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியில்அவருக்கும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் கார்த்திகைச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக 2017 ஜனவரி 11 தொலைக்காட்சிகள் வழியாக செய்தி அறியப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மையறியும் குழுவினர் அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

Full Media Report



Join us for our cause