Media
தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் என்கவுன்ட்டா் சம்பவங்கள் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குக்குள் மூவா் சுட்டுக்கொல்லப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. இந்த போக்கு சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் எதிரானதாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் தொடா்ச்சியாக சுட்டுக்கொல்லப்படுவது வழக்கை நீா்த்து போகச் செய்து விடும். என்கவுன்ட்டா் சாவுகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக உண்மை அறியும் குழுவை அமைத்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். என்கவுன்ட்டா் சம்பவங்களில் தொடா்புடைய காவல் அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
...