People's Watch in Media
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை, - நீதிபதி அதிர்ச்சி!!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை... பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி... காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்... திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் சிறப்பு வனத்தில் பணி செய்கின்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம் தற்போது நான் அனைவரின் சார்பாக பேசுகின்றேன் அனைத்து வாதாடிய வழக்கறினார்கள் சார்பில் நான் பேசுகின்றேன். .....................................................
மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது : லாக் அப் மரண வழக்கில் நீதிபதிகள் வேதனை! திருப்புவனம் இளைஞர் லாக் அப் மாரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது’ என வேதனை தெரிவித்துள்ளது. judges order in youth ajithkumar lockup death case சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது. .............................................................................. அப்போது மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, ”அஜித் குமார் மரணத்திற்கு பிறகு திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்று, 50 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என்றும் சமரசம் பேசியுள்ளனர்” என்று வாதம் முன்வைத்தார். ...........................................................
போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case சிவகங்கை, திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை அமர்வு விசாரித்தது. அது தொடர்பான விவரங்களை வக்கீல் ஹென்றி திபேன் கூறினார்.
அஜித்குமார் லாக் அப் மரணம் – சாட்சியங்கள் எங்கே? அழித்துவிட்டீர்களா? : போலீஸுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி! அஜித்குமார் லாக் அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ajithkumar lock up death chennai high court order சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடபுரத்தைச் சேர்ந்த அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில், ஜூன் 27ஆம் தேதி மானாமதுரை உட்கோட்ட சிறப்பு படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ......................................................................... இந்த வழக்கு விசாரணையின் போது, மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, “காவல்துறையினர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளை கொண்டு தாக்கியுள்ளனர்” என்று கூறி சில புகைப்படங்களை தாக்கல் செய்தார். போலீசார் அஜித் குமாரை தாக்கும் வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன், “முதலில் தென்னை தோப்பில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். போலீசார் அஜித்குமாரை தாக்கும் போது, அந்த சமயத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் தான் இருந்துள்ளார். அஜித் குமார் இறந்த பிறகு அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அஜித் குமாரின் தாயாரும் சகோதரரும் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை மகன் குறித்து போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்பி, அஜித் குமார் அம்மாவிடம் உங்கள் மகன் இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார்” என வாதங்களை முன் வைத்தார். ...................................................................
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார். ..................................................... காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார். "ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார். ............................................................
